தசாபுத்தி

சகல " சகல செல்வங்களை அளிக்கும் கோ பூஜை


உக்கம் பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரையில் 108 கோமாதா பூஜை



பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங் களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு 'கோமாதா' என்ற சிறப்பான பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது நந்தா, சுசீலை, பத்திரை சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன. பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் சகலவிதமான தெய்வங்களும், பார் போற்றும் முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றன. கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகிறது. அதனால் தான் கோமாதாவுக்குப் பூஜை செய்தால், நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. இறைவனின் வடிவம்.


இறைவனின் வடிவம்


பசுவை இறைவனின் வடிவமாகக் கருத வேண்டும். கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல் மற்றும் பல்வேறு வகையான பழங்களைப் படைக்க வேண்டும். நெய் விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். காலில் விழுந்து வணங்க வேண்டும். மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின்போது கன்றுடன் சேர்த்து பூஜிப்பது நல்லது.