தசாபுத்தி

ஆன்மா தேடும் பரிகாரம்!


  அகில உலகங்களும், ஒன்பது கிரகங்களும், மேலுலகம் எனப்படும் சொர்க்க உலகமும், நான்முகனான பிரம்மாவின் உலகமும் எல்லாம் புல், பூண்டு முதல் அதிக காலம் வாழும் வயதுடையவர்கள் வரை வாழ்ந்து தத்தமது கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி.


  இப்படிப்பட்ட உலகில் வாழ்ந்து, இன்பம், துன்பம் என்ற இருவகையான வினைகளும் தீர்ந்து அனைத்து உயிரினங்களும் முக்தி பெற்று மோட்சஅண்மையில் உலகில் சென்று இறைவனுடன் வாழவே, பகவான் கருணையினால் பூவுலகை படைக்கிறான்.


அப்படி படைக்கப்பட்ட பூமியில் வாழப் பிறந்த ஜீவராசிகள் (மனிதன் உட்பட) எல்லாம் தத்தமது கர்ம ம வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்து மாண்டு மடிகின்றன.


முற்பிறவியில் தாம் செய்த செயல் களுக்குண்டான பலனை இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவிப்பதற்காக புதிய முயற்சிகளை செய்தே ஆக வேண்டும். இந்தப் பிறவியில் இத்தகைய புதிய முயற்சியானது செயல் வடிவில் இருப்பதால் அது அடுத்த பிறவிக்கு உரியதாகும். எந்தவிதமான செயலும் செய்யாது இருப்பவர்களுக்கு அதை அனுபவிப்பதும் இயலாமல் போகும்.


ஆனால் மனிதர்கள் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும், துயரங்களையும் போக்க வேண்டியோ அல்லது குறைத்துக்கொள்ளவோ வழிவகைகளைத் தேடி அலைகின்றனர். கோயில்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்கிறார்கள். அப்படிச் செய்தும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை என்று புலம்புகிறார்களே தவிர, எந்த கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட வைப்பது இறைவன் என்பதை மறுந்து வருகிறார்கள். அதாவது உடனடியாக கைமேல் பலன் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, தாம் அத்தகைய பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு தகுதியுள்ளவர்கள் தானா? என்பதை சிந்தித்துப் பார்க்க - தவறிவிடுகிறார்கள்.


மோட்சஅண்மையில் திருச்சியிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு 49 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை . தங்களைப் பார்த்து எனக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு உண்டா? என்று கேட்க விரும்புகிறேன் ஐயா” என்றார்.


" உங்கள் வீடு கிழக்கு பார்த்துள்ளதா?” என்று கேட்டேன். "ஆமாம் சார்” என்றார்.


“வீட்டுக்கு ஒருபுறம் தாங்கிப் பிடிக்கும் வகையில் முட்டு ஏதாவது கொடுத்திருக்கிறீர்களா?”


“ஆமாம் ஐயா! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி”


“உங்கள் வீட்டுக்கு முன்னால் ரோடு வடக்கே போகிறது. அதில் கொஞ்ச தூரம் வடக்கே சென்றால் ஒரு ரோடு மேற்கே போகிறது. இந்த இரண்டு ரோடுகளும் சந்திக்கும் இடத்தின் ஒரு புறம் புளிய மரம் இருக்கிறது. அந்த ரோடு சந்திப்பின் அருகில் காங்கிரீட் கல்லில் 3 என்ற நம்பர் போட்டுள்ளது இல்லையா?” என்று கேட்டேன்.


“அப்படி எல்லாம் இல்லை சார்” என்றார்.


“சார் நான் இருப்பது கோவையில். நீங்கள் இருப்பது திருச்சியில். எனக்கு இங்கிருந்து தெரிகிறது. பக்கத்தில்இருக்கிற உங்களுக்கு தெரியவில்லை என்கிறீர்களே!” என்று சற்று கோபமாக கேட்டுவிட்டேன்.


“சார் ஒரு நிமிடம் அப்படியே இருங்கள். நான் ரோட்டில் போய்க் கொண்டு இருக்கிறேன் என்றவர், “சார் நீங்கள் சொல்வது அப்படியே இருக்கிறது!” என்று ஆச்சரியப்பட்டு பேசினார்.


“சரி, நாளைக்கு என்னை நேரில் சந்தியுங்கள்” என்றேன்.


"சரி சார்” என்றார்.


அவரோடு பேசிய சிறிது நேரத்தில் எனது மனம் ஏனோ படபடத்தது. நாளைக்கு அவர் வந்தால் கோபமாக திட்ட வேண்டும் என்று உள் மனம் படபடத்துக்கொண்டே இருந்தது.


சொன்னது போலவே மறு நாள் காலையில் என்னை சந்திக்க வந்தவர் எனது அருகில் இருந்த ஹனுமான் படம் முன்பு அப்படியே சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார்.


"போதும் எந்திரிங்க சார். உங்களது குறை என்ன?” என்றேன்.


“49 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை சார்” என்றார்.


“திருமணம் என்றால் என்ன?”


“பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவது திருமணம்” என்றார். "இது உங்களோட அகராதி. என்னோட அகராதியில் திருமணம் என்பது ஆணும், பெண்ணும் தாலி கட்டாமலேயே சேர்ந்து விட்டாலும் திருமணம்தான்.”


“சார், அது எனக்கு தெரியாது” என்றார்.


நான் அவருக்கு வழக்கமாக உபயோகிக்கும் 'டாரட்' கார்டை எடுத்து சார், நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம். விவாகரத்தான பெண்ணோ அல்லது கணவனை இழந்த பெண்ணாகவோ பார்த்து திருமணம் செய்யுங்கள். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குழந்தை இருந்தால் இதைவிட நல்லது. அப்படி செய்தால் உங்களுக்கு “ அமாம் சார்” என்றவர், “கணவனை இழந்த பெண் வேண்டாம். விவாகரத்து ஆன பெண் இருந்தால் போதும். ஆனால் குழந்தை இல்லாத பெண் வேண்டும். இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் செய்கிறேன்” என்றார்.


"சார், நான் ஒன்றும் புரோக்கர் கிடையாது. பரிகாரம் எல்லாம் இதற்கு தேவையில்லை. உங்களுக்கு பரிகாரம் என்பது நீங்கள் யோசித்து முடிவு எடுப்பதுதான்” என்றேன்.


அடுத்து அவர் என்னிடம் பேசிய பேச்சு சற்று எனக்கு பொறுமையை இழக்க வைத்துவிட்டது.


“சார் எனக்கு 49 வயசாச்சு. இனிமேல் எந்த வேலைக்கும் போக முடியாது. பெண் விவாகரத்தாகி இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு குழந்தைகள் இருக்கக் கூடாது. அந்தப் பெண் அரசு வேலை பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது கிடைக்க வழிவகை உண்டா ? பரிகாரம் செய்தால் அப்படி கிடைக்கும் என்று மதுரையில் ஒருவர் சொன்னார். செய்தேன். இதுவரை நடக்கவில்லை . உங்களைப் பார்த்தால் நடக்கும் என நினைத்து வந்தேன் சார்.” என்று உண்மையை உளறினார்.


"சார் இதற்கு நீங்கள் போக வேண்டிய இடமும், பார்க்க வேண்டிய ஆளும் இதுவல்ல. முதலில் நடையைக் கட்டுங்கள்” என்று கோபமாக பேசி


"சார், உங்களுக்கு பீஸ் எவ்வளவு?”


“உன்னிடம் பீஸ் வாங்க எனக்குத் தகுதியில்லை. இத்தனை வருடத்தில் உன்னைப் போல யாரும் இங்கு வந்ததும் இல்லை. இப்படி பேசியதும் இல்லை. முதலில் நீங்கள் எழுந்து செல்லலாம்.” என்று அனுப்பிவிட்டேன்.


ஆக, இந்த உலகில் இப்படிப்பட்ட புண்ணியவான்களும் தேடுதல் வேட்டையில் உலவி வருகிறார்கள் . பரிகாரம் என்ற வார்த்தையை ஜோதிடர்கள் சொல்ல வேண்டியது இல்லை. வருபவர்களே கேட்கிறார்கள். அந்த அளவுக்கு கலி முற்றிப்போய் சிலர் இவரைப் போல தேடிக்கொண்டே அலைகிறார்கள். தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் சிறந்த பரிகாரம் என்று உணர்ந்து கொள்ளும்வரை இப்படிப்பட்ட ஆன்மாக்கள் அலைந்துகொண்டே இருக்கும் என்பதுதான் நிஜம்.


டாக்டர் எம்.ஆர்.ஆனந்தவேல்,Ph.D.