தசாபுத்தி

அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்.


2020 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நேரத்தில், நாம் சில உறுதிமொழிகளை எடுத்துசெயல்பட்டால் நன்றாக இருக்குமே...


யாரையும் ஏமாற்ற மாட்டேன்.


யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டேன்.


யாருக்கும் கெட்டதை சொல்ல மாட்டேன்.


நன்றாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டேன். மற்றவர்களை கிண்டலாகப் பேசமாட்டேன்,


மற்றவர்கள் தவறுகளை பெரிதாக்கி, பேச மாட்டேன்.


தவறான வழியில் வரும் பணத்துக்கு ஆசைப்பட மாட்டோன்.


என் வேலையை உண்மையாகவும், ஒழுங்காகவும் செய்வேன்.


அம்மா, அப்பா மற்றும் வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பேன். 


இன்றைக்கு என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வேன்.



கோபத்திற்கு விடை கொடுப்போம்


ஒரு சில பொய்கள் கூட சில இடங்களில் நன்மை பயக்கும். ஆனால் கோபம் எப்பொழுதும் தீமையைத் தான் கொடுக்கும். கோபம் என்பது, பிறர் செய்யும் தவறுக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. கோபம் உண்டாகும் போது உடனே பதில் பேசாதீர்கள். உடனே பேசினால் தகாத வார்த்தைகளே வெளியே வரும். சில நிமிடங்கள் கழித்துப் பேசினால் பேச்சில் கடுமை குறையும். ஒரு வார்த்தை போதும் சமாதானம் தொடங்க... ஒரு தீண்டல் போதும் - அழுகை அடங்க...


ஒரு தீபம் போதும் - இருட்டு நீங்க ... ஒரு புன்னகை போதும் - துயரங்கள் போக.... பொய்வாழவிடாது! உண்மை என்றும் சாகவிடாது!! காகம் மயில் போல் அழகில்லை. ஆனால் படையல் என்னவோ காக்கைக்குத்தான். எனவே ஒவ்வொன்றும் அற்புதம்தான். அதனால் நாம் நாமாக இருப்போம். இந்த புத்தாண்டு செய்தியுடன் வாசகர்கள், முகவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



 


என்றும் அன்புடன், தே. தீனதயாளன் ஆசிரியர்.