பெண்ணின் பெருமை
தற்பொழுது, இந்திய நாட்டுப் பெண்கள் கல்வி, அரசியல், ஊடகங்கள், கலை மற்றும் பண்பாடு, சேவை மையங்கள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பற்பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார்கள்.
இந்திய சட்டமானது, அனைத்து இந்தியப் பெண்களுக்கும் சம உரிமை, மாநிலப்பி ரிவின் அடிப்படையில் பாகுபாடு இன்மை , வாய்ப்புகள் வழங்குவதில் சம நிலை, சமமான வேலைக்குச் சமமான கூலி போன்றனவற்றுக்கு உறுதியளிக்கிறது. கூடுதலாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவான சிறப்பு ஒப்பந்தங்களையும் கொள்கைகளையும் உருவாக்க மாநிலங்களுக்கு அனுமதி அளித்து வழிவகை செய்கிறது.மேலும், பெண்களின் கண்ணியத்திற்கெதிரான, அவர்களைச் சிறுமைப்படுத்துகின்ற செயல்களைக் கைவிட அறிவுறுத்துகிறது . அதுமட்டுமின்றி, நியாயமான மனிதாபிமான அடிப்படையில் உரிய பேறுகால விடுப்பு வழங்கவும் மாநில அரசு வழிவகுத்துள்ளது.
1970களின் இறுதியில்தான் பெண்ணிய இயக்கங்கள் உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது எனலாம். காவல் நிலையத்தில் மதுரா என்ற பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையே, தேசிய அளவில் பல பெண்ணிய இயக்கங்களை ஒருங்கிணைத்தது. காவல் நிலையத்தில் மதுராவை மானபங் கப்படுத்திய காவலர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட நிகழ்ச்சி 1979 1980 இல் மிகப்பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது, அந்த எதிர்ப்பு, தேசிய அளவில் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால், எவிடென்ஸ் ஆக்ட் (Evidence Act), கிரிமினல் புரொசீஜர் கோடு (Criminal Proce dure Code) மற்றும் இந்தியன் பீனல் கோடு (Indian Penel Code) போன்ற சட்டங்களில் மாற்றம் செய்யவும், சிறைக் கைதிகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஏற்ற தண்டனை குறித்த சட்டத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் நிர்பந்தப்படுத்தப் பட்டது, பெண் சிசுக்கொலை, ஒடுக்குமுறை, பெண்களின் ஆரோக்கியம், பெண்கல்வி போன்றவைகளுக்காகப் பெண்ணியக் கங்கள் ஒன்றுபட்டுப் போராடுகின்றன.
இந்திய நாட்டில் குடிப்பழக்கம் பெண்களின் மீது ஏவப்படும் வன்முறைக்குப் பெரிதும் காரணமாக இருப்பதால் பல பெண்ணிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, ஆந்திரா, இமாச்சல பிரதேசம், ஹரியான, ஒரிசா, மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் குடிப்பழக்கத்திற்கு எதிரான பல போராட்டங்களை நடத்தியுள்ளனர், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் பெண்களின் அடிப்படை உரிமைப் பற்றி பல தலைவர்களின் விளக்கங்கள் குறித்துப் பல இந்திய இஸ்லாமியப் பெண்கள் வினா எழுப்பியுள்ளனர். மேலும் மும்முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்யும் முறையினையும் இஸ்லாமியப் பெண்கள் எதிர்த்துள்ளனர்.
1990களில் அயல்நாட்டு நிறுவனங்கள் கொடுத்த நன்கொடைகளினால், பல புதிய அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGO) பெண் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு தோன்றின. சுய உதவிக் குழுக்களும், சுய தொழில் மகளிர் குழு (SEWA) போன்ற அரசு சாரா நிறுவனங்களும், இந்தியப் பெண்கள் உரிமைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் உள்ளுர் பெண்ணிய இயக்கங்களின் தலைவர்களாகப் பல பெண்கள் உருவாகினர். உதாரணமாக, நர்மதா பச்சாவ் அன்டோலான் (Narmada Bachao Andolan) இயக்கத்தின் தலைவராக உருவான மேதா பட்கரைக் (Medha Patkar) கூறலாம். இந்திய அரசாங்கம் 2001 ஆம் ஆண்டை பெண் முன்னேற்ற Swashakti) ஆண்டாக அறிவித்தது. பெண் முன்னேற்றத்திற்கான தேசியக் கொள்கை 2001ஆம் ஆண்டு உருவானது. .